IPL 2023 : கவாஸ்கர் சார் சொல்லியும் கேட்காம சஞ்சு சாம்சன் அப்டி செஞ்சதை ஜீரணிக்க முடியல – ஸ்ரீசாந்த் அதிருப்தி

Sreesanth
- Advertisement -

இறுதிக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2008க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி பட்டியலில் 5வது இடத்தை மட்டுமே பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இத்தனைக்கும் ஆரம்பத்தில் டாப் 4 இடத்திற்குள் இருந்த அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 2வது பகுதியில் பெங்களூருவுக்கு எதிராக 59 ரன்களுக்கு சுருண்டதை போன்ற சில மோசமான தோல்விகளை சந்தித்து பரிதாபமாக வெளியேறியது.

Jaiswal and Samson

- Advertisement -

அதை விட கடந்த வருடம் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து கேப்டனாக 15 வருடங்கள் கழித்து ராஜஸ்தானை ஃபைனல் வரை அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சன் இந்த வருடம் 14 போட்டிகளில் 362 ரன்கள் மட்டுமே சுமாராக செயல்பட்டது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஏற்கனவே இந்தியாவுக்காக 2015இல் அறிமுகமானாலும் 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து 2019இல் விளையாடி 2021 வரை குப்பை போல பயன்படுத்தப்பட்டு வந்த அவர் கடந்த சீசனில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ஓரளவு நிலையான வாய்ப்புகளைப் பெற்று அதில் நல்ல செயல்பாடுகளையும் வெளிப்படுத்தினார்.

ஸ்ரீசாந்த் அதிருப்தி:
ஆனாலும் கேஎல் ராகுல் போன்ற இதர வீரர்களுக்காக புறக்கணிக்கப்பட்ட அவர் ரிஷப் பண்ட் இல்லாத சமயத்தில் இந்த சீசனில் மிகச் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்த வாய்ப்பில் சுமாராக செயல்பட்ட அவருக்கு அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆரம்ப முதலே வேகம் சுழல் ஆகிய 2 வகையான பந்துகளையும் சிறப்பாக எதிர்கொள்ளும் திறமை கொண்ட சஞ்சு சாம்சன் கிடைத்த வாய்ப்புகளில் நிலைத்து நின்று பெரிய ரன்களை எடுக்க தவறியதே இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது.

Gavaskar

அந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் முதலில் 10 பந்துகள் நின்று பிட்ச் செட்டிலான பின் அதிரடியை துவங்குமாறு ஜாம்பவான் கவாஸ்கர் கேட்டுக் கொண்டும் அதை பின்பற்றாமல் சமீபத்திய போட்டிகளில் களமிறங்கியதுமே அதிரடியாக விளையாட முயற்சித்து சஞ்சு சாம்சன் அவுட்டாகி அதே தவறை தான் மீண்டும் செய்ததை தம்மை ஜீரணிக்க முடியவில்லை என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அவர் அடுத்த 6 மாதங்களில் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்த்ததாகவும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனாலும் அதே பழைய ஸ்டைலில் விளையாடிய அவர் தமக்கு ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவிக்கும் ஸ்ரீசாந்த் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “நான் எப்போதுமே சஞ்சு சாம்சனை சப்போர்ட் செய்வேன். ஏனெனில் அவர் எனது தலைமையில் அண்டர்-14 அளவில் விளையாடினார். இருப்பினும் கடந்த 4 – 5 வருடங்களில் ஒரு கிரிக்கெட்டராக நீங்கள் எப்போதும் உள்ளூர் அளவில் சிறப்பாக செயல்படுங்கள் ஐபிஎல் தொடரில் அல்ல என்று அவரிடம் சொல்லி வருகிறேன்”

Sreesanth

“ஏனெனில் இஷான் கிசான், ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே அவரை விட வாய்ப்பு பெறுவதில் முன்னே இருக்கிறார்கள். இருப்பினும் தற்போது பண்ட் இல்லாத சமயத்தில் சமீபத்தில் அவரை சந்தித்த நான் நிச்சயமாக அடுத்த 6 – 8 மாதங்களுக்குள் கம்பேக் கொடுப்பார் என்று நம்பினேன். ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் கடைசி 2 – 3 போட்டிகளில் அவர் களமிறங்கியதும் நேராக அவுட்டாகி சென்றார்”

இதையும் படிங்க:IPL 2023 : அந்த குழந்தையோட அட்ரஸ் அனுப்புங்க, நெஞ்சை தொட்ட சிறுவனை வித்யாசமாக பாராட்டிய கேஎல் ராகுல் – நடந்தது என்ன

“அதற்கு முன்பாகவே கவாஸ்கர் சார் அவரிடம் “உங்களுக்கு நீங்களே 10 பந்துகள் வாய்ப்பு கொடுத்து பிட்ச்சை படியுங்கள். ஏனெனில் உங்களிடம் திறமை இருப்பதை என்பதை நாங்கள் அறிவோம். ஒருவேளை 12 பந்துகளில் 0 ரன் எடுத்தால் கூட 25 பந்துகளின் முடிவில் உங்களால் 50 ரன்கள் எடுக்க முடியும்” என்று கூறினார். ஆனால் ராஜஸ்தானின் கடைசி கட்ட ஒரு போட்டியில் “இல்லை. நான் அப்படி விளையாட முடியாது. இதுதான் என்னுடைய ஸ்டைல்” என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் அவுட்டானது என்னால் ஜீரணிக்க முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement