ராஜஸ்தான் அணிக்கெதிரான இன்றைய சி.எஸ்.கே அணியின் பிளேயிங் இதுதான் – அணியில் 2 மாற்றங்கள்

CSK

நடப்பு 14 ஆவது ஐபிஎல் தொடரின் 12வது லீக் மேட்சில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதவுள்ளன. இந்த போட்டியில் சென்னை அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி டாப் ஆர்டரில் சொதப்பி வரும் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக ராபின் உத்தப்பா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

uthappa 1

ஏற்கனவே சென்னை அணியின் பேட்டிங் பலமாகவே இருக்கிறது இன்றைய போட்டியில் உத்தப்பாவும் களமிறங்கினால் சென்னை அணியின் பேட்டிங் ஆனது மிகவும் பலம் வாய்ந்ததாக அமையும். சென்னை அணியில் டுயூப்ளசிஸ் தொடங்கி மகேந்திர சிங் தோனி வரை ஏழு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அதேவேளையில் அணியில் மற்றொரு முக்கிய மாற்றமும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி வெளிநாட்டு ஆல்ரவுண்டரான பிராவோவை வெளியே அமரவைத்து விட்டு முழு நேர பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடியை உள்ளே கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. லுங்கி இங்கிடி அணியில் இடம்பிடிக்கும் பட்சத்தில் பௌலிங் யூனிட் இன்னும் வலுப்பெறும். ஏற்கனவே தனது வாய்ப்புக்காக காத்திருக்கும் லுங்கி நெகிடி இன்றைய போட்டியில் விளையாடினால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்

சென்னை அணியின் ப்ளேயிங் லெவன்:

- Advertisement -

உத்தப்பா/ ருத்துராஜ் கெய்க்வாட், டுயூப்ளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, மொயின் அலி, சாம் கரன், தோணி, ரவீந்திர ஜடேஜா, லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார்.