சி.எஸ்.கே அணியில் ஏற்படவுள்ள மாற்றம். புதிய விக்கெட் கீப்பராக தோனிக்கு பதிலாக விளையாடப்போகும் தமிழகவீரர்

Dhoni

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மிகவும் மோசமாக விளையாடி அனைவரது கெட்ட பெயரை வாங்கிக் கொண்டது. எனவே இந்த ஆண்டு அவற்றையெல்லாம் மாற்றியமைக்கும் வகையில் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து, இந்த ஆண்டு தொடரை கைப்பற்றும் வகையில் விளையாடுவோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பிலிருந்து செய்தி வந்தது.

ஆனால் முதல் போட்டியிலேயே டெல்லி கேப்பிடல் அணியுடன் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோல்வியடைந்து ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். எனவே அடுத்த போட்டியில், மகேந்திர சிங் தோனி விளையாட போவதில்லை என்கிற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் கிளவுஸ் போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட மைக்கேல் ஹசி மற்றும் ஜெகதீசன் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கோச் மைக்கேல் ஹசியுடன் இளம் வீரர் ஜெகதீசன் கிளவுஸ் போட்டுக்கொண்டு நிற்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.
இதனை ஆராய்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதனுடைய அடுத்த போட்டியை பஞ்சாப் அணியுடன் விளையாட இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

சரியான பார்மில் இல்லாத மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக ஜெகதீசன் களமிறங்கப் போகிறார் என்று கணித்துள்ளனர். ஆனால் தொனி பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கி ஜெகதீசனுக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் வெறும் ஐந்து போட்டிகளில் மட்டும் ஜகதீஷ் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது இதில் இரண்டு போட்டியில் மட்டும் தான் விளையாடினார். அதில் ஒரு போட்டியில் 33 ரன்கள் அடித்து அசத்தினார். டி20 போட்டிகளில் நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும் இந்த கதையை மகேந்திர சிங் தோனி ஏன் தேர்ந்தெடுப்பதில்லை என்று கேள்விகள் பல வகையில் எழுந்தது.

எனவே இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில் அடுத்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக மகேந்திர சிங் தோனிக்கு பதிலாக ஜகதீசன் விளையாடப் போகிறார் என்று அதிர்ச்சி செய்தி சமூக வலைதளங்களில் கசிய ஆரம்பித்துள்ளது.