CSK : தமிழில் எழுத பயிற்சி செய்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய சி.எஸ்.கே வீரர்கள் – வீடியோ

சென்னை அணி வீரர்கள் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைவரும் அவர்களது பெயர்களை தமிழில் எழுதி பழகினார்கள். அவர்களுக்கு

Csk-1
- Advertisement -

சென்னை அணி வீரர்கள் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைவரும் அவர்களது பெயர்களை தமிழில் எழுதி பழகினார்கள். அவர்களுக்கு சென்னை அணியின் வீரரான முரளி விஜய் தமிழில் எழுத பயிற்சி அளித்தார். பின்பு அனைவரும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழில் கூறி அசத்தினார்கள். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

சி.எஸ்.கே அணியினரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவினை சென்னை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தங்களது ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தது குறித்ப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 29 ஆவது போட்டி நேற்று மதியம் 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணிகளும் மோதின.

- Advertisement -

Raina

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது சென்னை அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் துவக்க வீரரான க்றிஸ் லின் 51 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

Tahir 1

அடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரெய்னா 42 பந்துகளில் 58 ரன்களும், ஜடேஜா 17 பந்துகளில் 31 ரன்களையும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய சென்னை அணியின் இம்ரான் தாஹிர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement