CSK vs DC : சென்னை அணியின் 100 ஆவது வெற்றி பற்றிய சுவாரசிய குறிப்பு – விவரம் இதோ

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை

Dhoni-Csk
- Advertisement -

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களை குவித்தார் முன்ரோ 27 ரன்களை குவித்தார். சென்னை அணியின் சார்பாக பிராவோ சிறப்பாக பந்து வீசி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிறகு 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோர் சதம் அடித்து அரைசதம் அடித்தனர். டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Watson-2

கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. இந்த தொடரில் துவக்கத்திலிருந்தே அனைத்து அணிகளுக்கும் சென்னை அணி சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பெற்ற வெற்றியானது நமது சென்னை அணியின் நூறாவது வெற்றி ஆகும்.

Bravo

கடந்த 2008ஆம் ஆண்டு தோனி முதன்முதலாக சென்னை அணிக்கு கேப்டனாக பதவி ஏற்றார். அதன் பிறகு இதுவரை சென்னை அணியின் ஒரே கேப்டன் தோனி தான். சூதாட்ட புகாரில் இரண்டு வருடம் சென்னை அணி தடை செய்யப்பட்ட போதும் மீண்டும் திரும்ப வந்து சென்ற வருடம் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்க டோனி தலைமையிலான சென்னை அணி தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement