புல்வாமா தாக்குதலில் பலியானோரின் குடும்பத்திற்கு சி.எஸ்.கே நிர்வாகம் செய்யப்போகும் உதவி – என்ன தெரியுமா ?

csk
- Advertisement -

இன்னும் இரண்டு நாட்களில் 23 ஆம் தேதி இந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த 12வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்கான சென்னை அணி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

VK and MS

- Advertisement -

இந்த முதல் போட்டியில் சென்னை அணி நிர்வாகம் புல்வாமா தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு தங்களது உதவியை செய்ய உள்ளது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டிக்கு விற்கப்பட்ட முழு டிக்கெட்டுகளின் வருமானத்தொகை அனைத்தையும் தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் குடும்பங்களுக்கு வழங்க உள்ளது என்று சென்னை அணியின் இயக்குனர் ராகேஷ் சிங் தெரிவித்தார்.

இந்த தொகையை சனிக்கிழமை போட்டி ஆரம்பிக்கும் முன்னர் இந்திய ராணுவத்தில் கவுரவ பதவியில் இருக்கும் சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி அந்த குடும்பங்களுக்கு காசோலையாக வழங்க உள்ளார். சி.எஸ்.கே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பினை சென்னை அணி ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Ipl opening

ஏற்கனவே ஐபில் நிர்வாகமும் துவக்க விழாவினை நிறுத்தி அந்த தொகையினை ராணுவத்திற்கு கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியது. அதனை அடுத்து இந்த ஆண்டும் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி உத்வேகம் காட்டும் என நம்பப்படுகிறது.

Advertisement