மிகப் பெரும் எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான பதிமூன்றாவது சீசன் ஐபிஎல் டி20 தொடர் நாளை துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட இருக்கிறது. அபுதாபியில் நடைபெற இருக்கும் இந்த போட்டி நாளை இரவு சரியாக 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியை சிஎஸ்கே வெற்றியுடன் துவங்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் தோனி கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து களமிறங்கும் அதன் காரணமாக இந்தப் போட்டியில் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எதிரி உள்ளது. சிஎஸ்கே அணி துபாய் சென்றதில் இருந்து இப்போது வரை அணியில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகள் பயிற்சிகள் என பல்வேறு புகைப்படங்களை சிஎஸ்கே அணி நிர்வாகத்தினர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளைய போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் யார் ? யார் ? இடம்பெறுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக யார் விளையாடுவார்கள் ? சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் யார் ஸ்பின்னர்களாக விளையாடுவார்கள் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
ஆனால் பல கிரிக்கெட் விமர்சகர்கள் கூறும்படி நாளைய போட்டியில் விளையாடும் வீரர்கள் இவர்களாக தான் இருப்பார்கள் என்ற உத்தேச அணி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி வாட்சன் மற்றும் டூப்ளெஸ்ஸிஸ் துவக்கவீரர்களாக விளையாடுவார்கள். மேலும் 3 ஆவது இடத்தில் ராயுடுவும், 4 ஆவது இடத்தில் தோனி மற்றும் 5 ஆவது இடத்தில் கேதார் ஜாதவ் ஆகியோர் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
6 ஆவது வீரராக ஜடேஜா, 7 ஆவது வீரராக ஆல்ரவுண்டர் பிராவோ விளையாடுவார்கள். மீதமுள்ள 4 பந்துவீச்சாளர்களில் தீபக் சாகர், ஷர்துல் தாகூர், பியூஷ் சாவ்லா மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.
சென்னை அணியின் உத்தேச வீரர்களின் பட்டியல் இதோ :
1) வாட்சன்
2) டூப்ளெஸ்ஸிஸ்
3) ராயுடு
4) தோனி
5) கேதார் ஜாதவ்
6) ஜடேஜா
7) பிராவோ
8) ஷர்துல் தாகூர்
9) தீபக் சாகர்
10) பியூஷ் சாவ்லா
11) இம்ரான் தாஹீர்