ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி இன்று இரவு ஏழு முப்பது (7.30) மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்குநேர் மோதுவதால் இந்த போட்டியின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்போடு சென்னை அணியும், இன்னுமொரு வெற்றி பெற்ற பிளே ஆப் சுற்றின் வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்போடு டெல்லி அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடும் 11 வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து இந்த பதிவில் காண உள்ளோம்.
தோனியை பொருத்தவரை ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணியை அப்படியே மாற்றாமல் கொண்டும் செல்லும் வழக்கத்தை உடையவர் என்பதை நாம் அறிந்துள்ளோம். அதனால் இன்றையப் போட்டியில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. அதனால் மீண்டும் இம்ரான் தாஹீருக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது. மேலும் கடந்த போட்டியைப் போலவே சாம் கரன் மற்றும் டு பிளேசிஸ் ஆகியோரே துவக்க வீரராக களம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
வாட்சன், ராய்டு, தோனி என மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் பின்வரிசையில் ஜடேஜா, பிராவோ என ஆல்ரவுண்டர்களும், பியூஷ் சாவ்லா, கரண் ஷர்மா, தீபக் சஹர், ஷர்துல் தாகூர் என இந்திய பவுலர்களும் இருப்பதால் இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற கடுமையாக போராடும் என்று கூறப்படுகிறது. இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் ஆடும் உத்தேச லெவன் அணி இதுதான் :
சி.எஸ்.கே அணியின் உத்தேச வீரர்களின் பட்டியல் :
1) சாம் கரன்
2) டூபிளெஸ்ஸிஸ்
3) வாட்சன்
4) ராயுடு
5) தோனி
6) ஜடேஜா
7) பிராவோ
8) பியூஷ் சாவ்லா
9) கரண் சர்மா
10) தீபக் சாகர்
11) ஷர்துல் தாகூர்