கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய சி.எஸ்.கே அணியின் பிளேயிங் 11 இதுதான் – அணி வீரர்களின் லிஸ்ட் இதோ

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று (07/10/2020) இரவு ஏழு முப்பது (7.30 pm ) மணிக்கு துவங்கும் இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

CSK-1

சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் மூன்று தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் அசத்தல் பார்ம்மிற்கு திரும்பியுள்ள சிஎஸ்கே அணி தனது வெற்றிப் பயணத்தை தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இருப்பினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அதிக அளவில் மேட்ச் வீரர்களை தங்களது அணியில் வைத்துள்ளதால் அந்த அணியும் சிறப்பாக செயல்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் தற்போது இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணி குறித்த உத்தேச வீரர்களின் பட்டியலில் இந்த பதிவில் காண உள்ளோம்.

faf

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் சென்னை அணி வீரர்களை மாற்றாமல் களமிறக்கி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனவே இந்த போட்டியிலும் தோனி அணியில் எந்த மாற்றங்களையும் செய்யாமல் வெற்றியை அப்படியே தொடர விரும்புவார் என்று தெரிகிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் உத்தேச வீரர்களின் பட்டியல் இதோ :

1) வாட்சன்

2) டூபிளெஸ்ஸிஸ்

3) ராயுடு

4) கேதார் ஜாதவ்

5) தோனி

6) ஜடேஜா

7) பிராவோ

8) சாம் கரன்

9) தீபக் சாகர்

10) பியூஷ் சாவ்லா

11) ஷர்துல் தாகூர்