மும்பை அணிக்கெதிரான இன்றைய போட்டியின் சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

CskvsMi
- Advertisement -

ஐபிஎல் தொடரில் பொறுத்தவரையில் மிகப் பெரிய இரண்டு அணியாக பார்க்கப்படுவது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான். இப்படி சர்வதேச கிரிகெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டால் காரசாரமாக இருக்குமோ, அதே அளவுக்கு காரசாரம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியிலும் இருக்கும்.

CSKvsMI

இவர்கள் இருவரும் இதுவரை ஐபிஎல் தொடரில் மொத்தமாக 32 முறை மோதியுள்ளனர். அதில் மும்பை இந்தியன்ஸ் 19 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சென்னை பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் அதனை எப்படி வீழ்த்துவது என்கிற மும்பை இந்தியன்ஸ்க்கு நன்றாக தெரியும். எனவே இன்றைய போட்டியில் சுவாரசியம் அதிக அளவில் இருக்கும் என்பதால், போட்டியை காண அனைத்து ரசிகர்களும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியை விட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மிக அற்புதமான அணியாக உருமாறி இருக்கிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் அதற்கு அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. அந்த அணியில் தோனி மற்றும் ஷர்துல் தாகூர் தவிர மற்ற அனைத்து வீரர்களும் மிக அபாரமான பார்மில் உள்ளனர்.

CSK

எனவே அந்த அணி இன்றைய போட்டியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கலாம். எல்லாம் சரியாக இருந்தால் அதே அணியாக தான் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சென்னை அணி ஒரு பக்கம் மிக அபாரமான பார்மல் இருக்க மறுபக்கம் மும்பை அணி சுமாரான அணியாக தான் இருக்கிறது. அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை. பாண்டியா பிரதர்ஸ் மற்றும் இஷான் கிஷன் அவ்வளவு சிறப்பாக விளையாடுவது இல்லை. எனவே இன்றைய போட்டியில் சென்னையின் கை சற்று ஓங்கி இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

சி.எஸ்.கே பிளெயிங் லெவன் இதோ :

ருதுராஜ், டு பிளசிஸ், மொயின் அலி, ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கரன், ஷரத்துல் தாக்கூர், சாகர், லுங்கி நிகிடி

இருப்பினும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி காலங்காலமாக மிக அற்புதமாக விளையாடி வருவதால் இன்று சென்னை அணிக்கு சரிசமமாக மும்பை அணி விளையாடும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம். இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு போட்டியாக இன்று இரவு ஏழு முப்பதுக்கு தொடங்க உள்ளது.

Advertisement