மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவுள்ள சென்னை அணி டீம் இதுதான் – விவரம் இதோ

CskvsMi

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரிய அச்சுறுத்தலுக்கு பிறகு கிட்டத்தட்ட ஆறு மாதங்களைக் கடந்து தற்போது வரும் சனிக்கிழமை அன்று துபாயில் 13 ஆவது ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ளது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களிடம் அதிகளவு பெருகியுள்ளது.

csk

கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையைத் தவற விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இம்முறை கடும் போட்டி அளிக்கும் விதமாக விளையாடும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு இதில் உள்ளது.

மேலும் சிஎஸ்கே அணியில் இருந்து விலகியே டாப் ஆர்டர் பேட்ஸ்மென் சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக யார் விளையாட போகிறார்கள் ? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக யார் விளையாடப்போகிறார்கள் என்பது வரும் சனிக்கிழமை வெளிவரும்.

csk-vs-mi

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ஆகாஷ் சோப்ரா சென்னை அணியில் விளையாட உள்ள 11 வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது : வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன் களாக களமிறங்க வேண்டும்.

- Advertisement -

மூன்றாவது வீரராக டூபிளெஸ்ஸிஸ் மற்றும் நான்காவது வீரராக ஜாதவ் மிடில் ஆர்டரில் ஐந்தாவதாக தோனி அதன் பின்னர் ஜடேஜா, பிராவோ ஆகியோர் விளையாடினால் பின்பகுதியிலும் சென்னை அணி பலம் பெறும் என்று கூறியுள்ளார். பவுலிங்கை பொருத்தவரை இம்ரான் தாகிர், பியூஷ் சாவ்லா, தீபக் சஹர், ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பிடிப்பது தான் சரியான கலவையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Rayudu

சென்னை அணியின் உத்தேச லெவன் இதோ : வாட்சன், ராயுடு, டூபிளெஸ்ஸிஸ், ஜாதவ், தோனி, ஜடேஜா, பிராவோ, இம்ரான் தாகீர், பியுஷ் சாவ்லா, தீபக் சாகர், ஷர்துள் தாகூர்