இன்றைய போட்டிக்கான சி.எஸ்.கே அணி இதுதான். இன்றாவது வெற்றி கிடைக்குமா ? – விவரம் இதோ

csk
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணியை சென்னை அணி வீழ்த்தி இருந்தாலும் அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வி அடைந்து தற்போது புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளது. இந்த தொடர் தோல்விகள் காரணமாக பார்க்கப்படுவது யாதெனில் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் ஆகியோரது விலகல் தான் என்று கூறப்படுகிறது.

Rayudu 3

மேலும் இடையில் இரண்டு போட்டிகளில் விளையாடாத ராயுடுவும் அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். இந்நிலையில் ராயுடு மற்றும் பிராவோ ஆகியோர் கடந்த போட்டியில் மீண்டும் அணியில் இணைந்து அணிக்கு பலமாக பார்க்கப்பட்டது. இருப்பினும் கடந்த போட்டியில் சென்னை அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது போட்டியாக இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை துபாய் மைதானத்தில் சந்திக்கிறது.

- Advertisement -

இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியிலாவது சென்னை அணி வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் சி.எஸ்.கே அணியின் உத்தேச பட்டியலை இந்த பதிவில் காண்போம்.

faf

1) வாட்சன்

- Advertisement -

2) டூபிளெஸ்ஸிஸ்

3) ராயுடு

- Advertisement -

4) கேதார் ஜாதவ்

5) தோனி

- Advertisement -

6) ஜடேஜா

7) பிராவோ

8) சாம் கரன்

9) தீபக் சாகர்

10) பியூஷ் சாவ்லா

11)ஷர்துள் தாகூர்

bravo

இது கடந்த போட்டிக்கான அதே அணியாக இருப்பினும் துபாய் போன்ற மைதானங்களில் துவக்கத்தில் பவுண்டரிகள் கிடைத்தாலும் மிடில் ஓவர்களில் ரன்களை ஓடி எடுப்பது அவசியம் பின்னர் 14 ஆவது ஓவரில் இருந்து அடித்து ஆடினால் சென்னை அணிக்கு போட்டி சாதகமாக அமைய வாய்ப்புண்டு.

Advertisement