இப்படியெல்லாம் ஐ.பி.எல் நடத்துனா நாங்க விளையாடமட்டோம். போர்க்கொடி தூக்கிய – சி.எஸ்.கே வீரர்கள்

csk
- Advertisement -

இந்த வருடம் நடக்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைய ஒரு வருடம் ஆகும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் நடைபெறவிருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரும் தள்ளி வைக்கப்படும் அபாயத்தில் இருக்கிறது.

CskvsMi

- Advertisement -

அதே நேரத்தில் டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம் என்றும் பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது . மேலும் ,வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவிற்கு வந்து விளையாடுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் உள்ளூர் வீரர்களை மட்டும் வைத்து ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று பிசிசிஐ யோசனை தெரிவித்து வந்தது.

இந்த யோசனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முற்றிலுமாக நிராகரித்து உள்ளதாக தெரிகிறது. இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில் : இந்திய வீரர்களை மட்டுமே வைத்து ஐபிஎல் தொடரை நடத்த தேவை இல்லை. அப்படி ஒரு அவசியம் இன்னும் வந்துவிடவில்லை. இந்த யோசனைக்கு சென்னை அணி ஒப்புக்கொள்ளவில்லை .ஒருவேளை இந்திய வீரர்களை மட்டும் வைத்து ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டால் அது சையத் முஷ்டக் அலி கோப்பை தொடரை போலவே இருக்கும்.

இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. மேலும் பிசிசிஐ உடன் எந்த அணி நிர்வாகமும் தொடர்பு இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபிஎல் தொடர் நடக்கிறதா என்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் ஒரு வெற்றிகரமான அணியாக இருந்து வருகிறது.

இதுவரை நடந்த அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி எட்டு முறை இறுதிப்போட்டி சென்று அதில் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த சீசனில் தோனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலககோப்பை அணியில் இடம்பெற காத்திருந்தார். ஆனால் கொரோனாவின் தாக்கம் காரணமாக தோனியின் வருகை தாமதமாகி உள்ளது.

Advertisement