சி.எஸ்.கே அணி புதிய விளம்பரத்தில் நடித்த தோனி, ஜாதவ், முரளி விஜய் மற்றும் ஹர்பஜன் – வைரல் வீடியோ

MS
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி சனிக்கிழமை முதல் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த போட்டிக்காக ஏற்கனவே சென்னை அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீரர்கள் அவ்வப்போது விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது சென்னை அணி வீரர்களான தோனி, ஜாதவ், ஹர்பஜன் மற்றும் முரளி விஜய் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காண பாடல் விளம்பரத்தில் நடித்துள்ளனர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ :

இதனை கண்ட சென்னை ரசிகர்கள் அனைவரும் தங்களது சமூக வலை தளங்களில் இந்த வீடியோவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். முதல் போட்டிக்கான டிக்கெட் நேற்று விற்கத் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement