CSK : எது எப்படி நடந்தாலும் சி.எஸ்.கே எப்போவும் சாம்பியன் தான். ரசிகர்களுக்கு செய்தியுடன் நன்றி தெரிவித்த – சி.எஸ்.கே.நிர்வாகம்

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்

csk
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இதனால் மும்பை அணி 4 ஆவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

malinga 2

இந்த இறுதி போட்டி முடிந்ததும் சென்னை அணி நிர்வாகம் தனது ரசிகர்களுக்காக ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை : அனைவருக்கும் வணக்கம் எங்களது ஏற்றத்தாழ்வுகள் அனைத்திலும் எங்களை நம்பி அவர்களுக்கும் ஆதரித்தவர்கள் அனைவர்க்கும் நன்றி.

சூழ்நிலை எதுவாக இருந்தாலும் முடியாதவையாக இருந்தாலும் அதனை வெற்றிகரமாக சென்னை அணி செய்ய காரணம் நீங்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வேட்டை தொடரும் விசில் போடு என்று குறிப்பிட்டுள்ளது. எப்போதும் சென்னை அணியையும், ரசிகர்களையும் பிரிக்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

Advertisement