5 பேருக்கு மட்டுமல்ல 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ். மிகப்பெரிய சிக்கலை சந்திக்கவுள்ள சி.எஸ்.கே – வெளியான அதிர்ச்சி தகவல்

Dhoni

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த 13 ஆவது ஐபிஎல் சீசன் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. மொத்தம் 53 நாட்களில் 60 போட்டிகளையும் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மைதானங்களில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தது.

Dubai

அதன்படி கடந்த 21ஆம் தேதி முதல் அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்தன மேலும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதல் பிறகு தற்போது பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். இப்படி எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்க தற்போது இந்தத் தொடரில் சிஎஸ்கே அணி பங்கேற்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகம் சென்று அடைந்த சிஎஸ்கே அணி பயிற்சிக்கு முன்னர் முதல் நாள் மூன்றாம் நாள் ஐந்தாம் நாள் என மூன்று கட்ட கொரோனா பரிசோதனையை மேற் கொண்டது. இதில் சிஎஸ்கே சார்பில் ஐந்து பேருக்கு 5 (Tested Positive) உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Raina

அதன்படி பயிற்சிக்கு பந்துவீச அழைத்துச் சென்றுள்ள வலைப்பயிற்சி பந்துவீச்சாளர் ஒருவருக்கும், நான்கு உதவி அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை சிஎஸ்கே அணி வீரர்களை தனிமைப்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின் படி சி.எஸ்.கே அணியில் 5 பேருக்கு அல்ல. 13 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சி.எஸ்.கே அணி இந்த தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் சில தினங்களில் வெளியாக இருந்த நிலையில் இந்த தொடரே நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர் துவங்குவதற்கு முன் இந்த எண்ணிக்கை அதிகரித்தால் சிஎஸ்கே அணியும் மட்டுமல்ல ஒட்டுமொத்த தொடரருமே நடைபெறுவதில் பாதிப்படைய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.