
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுக்கு தேவையான 20 வீரர்களை வாங்கியுள்ளது. முதலாவதாக சமீபத்திய வருடங்களில் துவக்க வீரராக அசத்திய நியூசிலாந்தின் டேவோன் கான்வே 6.25 கோடிக்கு மீண்டும் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டார்.
அதே போல கடந்த சீசனில் நம்பிக்கை கொடுத்த நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 4 கோடிக்கு மீண்டும் வாங்கப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 9.75 கோடிக்கு மீண்டும் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அவருடன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மற்றொரு ஸ்பின்னர் நூர் அகமது 10 கோடி என்ற பெரிய தொகைக்கு சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டார்.
மேலும் சுட்டிக்குழந்தை என்று சிஎஸ்கே ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்தின் சாம் கரண், ஜேமி ஓவர்டன், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எலிஸ் ஆகியோரும் எதிர்பார்த்ததை விட குறைந்த விலைக்கு வாங்கப்பட்டார்கள். ராகுல் திரிபாதி, கலீல் அஹ்மத் ஆகிய இந்திய வீரர்களும் விஜய் சங்கர், ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய தமிழக வீரர்களும் வாங்கப்பட்டுள்ளார்கள்.
தமிழக அணிக்காக விளையாடும் குர்ஜப்நீத் சிங், 2022 சீசனில் அசத்திய முக்கிய சவுத்ரி, உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வரும் அன்சுல் கம்போஜ், சாய்க் ரசீத் போன்ற இந்தியாவைச் சேர்ந்த தரமான இளம் வீரர்களும் சிஎஸ்கே அணிக்காக குறைந்த விலையில் வாங்கப்பட்டுள்ளார்கள். அவர்களை வாங்கியது போக சிஎஸ்கே அணியிடம் 0.50 லட்சம் மட்டும் மீதம் இருக்கிறது.
மொத்தத்தில் 3 வகையான துறைகளிலும் அசத்தக்கூடிய ஓரளவு சமநிலை நிறைந்த அணியை சிஎஸ்கே 2025 ஐபிஎல் தொடருக்காக தேர்ந்தெடுத்துள்ளது. ஐபிஎல் 2025 தொடருக்கான சிஎஸ்கே அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்) 18 கோடி, மதீஸா பதிரனா (13 கோடி), சிவம் துபே (12 கோடி), ரவீந்திர ஜடேஜா (18 கோடி), எம்எஸ் தோனி (4 கோடி), டேவோன் கான்வே (6.25 கோடி), ராகுல் திரிபாதி (3.40 கோடி), ரச்சின் ரவீந்திரா (4 கோடி), அஸ்வின் (9.75 கோடி)
இதையும் படிங்க: முதல் டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு அவசர அவசரமாக நாடு திரும்பிய கவுதம் கம்பீர் – எதற்காக தெரியுமா?
கலீல் அஹ்மத் (4.80 கோடி), நூர் அஹ்மத் (10 கோடி), விஜய் சங்கர் (1.20 கோடி), சாம் கரண் (2.40 கோடி), ஷாய்க் ரஷீத் (30 லட்சம்), அன்சுல் கம்போஜ்(3.40 கோடி), முகேஷ் சௌத்ரி (30 லட்சம்), தீபக் ஹூடா (1.70 கோடி), குர்ஜப்னீட் சிங் (2.20 கோடி), நாதன் எல்லிஸ் (2 கோடி), ஜாமி ஓவெர்ட்டன் (1.50 கோடி), கமலேஷ் நாகர்கோட்டி (30 லட்சம்), ராமகிருஷ்ணா கோஸ் (30 லட்சம்), ஸ்ரேயாஸ் கோபால் (30 லட்சம்), வன்ஷ் பேடி (55 லட்சம்), ஆண்ட்ரே சித்தார்த் (30 லட்சம்)