CSK : சென்னை அணி கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு செல்லும் – காரணம் இதுதான்

CSKShop
- Advertisement -

சென்னை அணி மும்பை அணியுடன் நடந்த முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்து தற்போது டெல்லி அணியுடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. டெல்லி அணி சன் ரைசர்ஸ் அணியை தோற்கடித்து தற்போது மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட அணியாக வலம் வருகிறது.

csk-vs-mi

- Advertisement -

ஏற்கனவே மும்பை அணியுடன் தோற்று உள்ள சென்னை அணி பேட்டிங்கில் சற்று சொதப்பி வருகின்றது. இருப்பினும் சென்னை அணி இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றும் பலரும் கூறிவருகின்றனர். அதற்கான காரணத்தையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி டெல்லி அணிக்கும், சென்னை அணிக்கும் எதிரான போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. அந்த மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் என்பதால் சென்னை அணிக்கு அது பெரிய பலம் ஏனெனில் ஹர்பஜன், ஜடேஜா மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் அந்த போட்டியில் அவர்கள் நிச்சயம் ஜொலிப்பார்கள் என்று நம்பலாம்.

மேலும், ஏற்கனவே இந்த தொடரில் சென்னை அணி டெல்லி அணியை இருமுறை வீழ்த்தியுள்ளது. எனவே இந்த விடயமும் சென்னை அணிக்கு டெல்லி அணியை வீழ்த்த ஒரு தைரியத்தை தரும். அதேபோன்று டெல்லி அணியின் கேப்டன் ஐயர் தற்போதே வளர்ந்து வரும் வீரராக உள்ளார். ஆனால், சென்னை அணியின் கேப்டன் தோனியின் அனுபவத்தை பற்றி கூறி தெரியவேண்டியது இல்லை.

Dhoni-1

எனவே, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு சென்னை அணி தகுதிபெறும் என்று சென்னை அணியின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி நேரடி இறுதி போட்டிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement