நேற்றைய போட்டியில் சி.எஸ்.கே அணி படைத்த விசித்திரமான சாதனை – இப்போதான் 2 ஆவது முறையாம்

bravo
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐபிஎல் வரலாற்றில் ஒரு விசித்திரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முதல் 3 ஓவர்களில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

ruturaj 1

- Advertisement -

அதேபோன்று ஆறாவது ஓவரின் கடைசி பந்தில் தோனியும் ஆட்டமிழக்க பவர்பிளே ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக சென்னை அணி 20 ஓவர்கள் வரை தாக்கு பிடிக்குமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஜடேஜா மற்றும் ருதுராஜ் ஆகியோர் பாட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது.

அதன்பிறகு இறுதி நேரத்தில் பிராவோ சற்று அதிரடி காண்பிக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 88 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்தது.

chahar

இதன் காரணமாக சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் சாதனை விடயம் யாதெனில் : முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி பவர் பிளே ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் ரன் குவிப்பில் ஈடுபட்டு எதிர் அணியை இலக்கை எட்டவிடாமல் வீழ்த்தியது இதுவே இரண்டாவது முறை.

csk

இதற்கு முன்னர் சன்ரைசர்ஸ் அணி ஒருமுறை பவர்பிளே ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அதன் பின்னர் மீண்டு வந்து ரன்களைக் குவித்து எதிரணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை அணி இந்த சாதனையை இரண்டாவது முறையாக படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement