இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இஷான் கிஷன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ருதுராஜ் கெய்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது :
வெளிப்படையான சி.எஸ்.கே அணியின் பலவீனம் :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஹென்றிச் கிளாஸன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 59 ரன்களை குவித்து அசத்தினர். பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக 10 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 34 ரன்களையும், ஆயுஷ் மாத்ரே 30 ரன்களையும் குவித்தனர். சிஎஸ்கே அணி கடைசியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருந்த வேளையில் மீண்டும் இந்த போட்டியில் அடைந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சி.எஸ்.கே அணி சேசிங் என்றாலே தடுமாறி வருவது குறித்த ஒரு புள்ளிவிவரம் வெளியாகி சென்னை அணியின் பலவீனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அந்த வகையில் வெளியான ஒரு புள்ளி விவரத்தின் படி கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அனியானது 175 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கினை 18 முறை எதிர்த்து விளையாடியுள்ளது.
இதையும் படிங்க : வீரேந்திர சேவாக்கை பின்னுக்கு தள்ளி ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – அபிஷேக் சர்மா
ஆனால் அதில் இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி நேற்றைய போட்டியின் தோல்வியோடு சேர்த்து மொத்தம் 16 முறை தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே சென்னை அணியால் வெற்றிபெற முடியும் என்றும் பெரிய இலக்கினை சென்னை அணியால் சேசிங் செய்ய முடியாது என்கிற பலவீனமும் வெளிப்படையாக தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.



