டெல்லி அணிக்கெதிரான முதல் போட்டியில் இருந்தே இவர் கண்டிப்பா சி.எஸ்.கே அணியில் விளையாடுவார் – அதிகாரி தகவல்

CSK-1
- Advertisement -

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்தியா முழுவதும் ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுவதால் ரசிகர்களிடையே இந்த தொடர்பு பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ipl

- Advertisement -

இந்த தொடருக்கான சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ள முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆன ஜடேஜா கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகடமியில் தனது உடற்தகுதியை உறுதி செய்து சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன இவர் ஒருநாள்,டெஸ்ட், டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக பார்க்கப்படும் ஜடேஜா தற்போது அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருவது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள சிஎஸ்கே அணியின் முக்கிய அதிகாரி ஒருவர் : ஜடேஜா காயத்தில் இருந்து முழுவதுமாக மீண்டு விட்டார்.

Jadeja-2

வலைப்பயிற்சியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். இதனால் டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் இருந்து ஜடேஜா நிச்சயம் சிஎஸ்கே அணியில் விளையாடுவார் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது .

Advertisement