தோனிக்காக இதை நான் செய்வேன்..! ரெய்னா சபதம்..! – எதுக்கு தெரியுமா..?

raina
- Advertisement -

இரண்டு ஆண்டுகள் தடிக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் வரும் சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது, இந்த போட்டியில் தோணிக்காக கண்டிப்பாக கோப்பையை வெல்வோம் என்று சென்னை அணியின் கேப்டன் ரெய்னா தெரிவித்துள்ளார்.
dhoni
டோனி தலைமையிலான சென்னை அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை நடந்து முடிந்த அணைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிலே ஆப் சுற்றிற்க்கு தகுதி பெற்ற ஒரே அணி என்றால் அது சென்னை அணி மட்டும் தான். இதுவரை 4 முறை இறுதி போட்டிக்கு நுழைந்துள்ள சென்னை அணி 2 முறை பட்டத்தை வென்றுள்ளது.

இந்த ஆண்டு நடந்து வரும் ஐபிஎல் போட்டியிலும் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் சென்னை அணி கடந்த செவ்வாய் கிழமை நடந்த போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த முறை சென்னை அணியின் கேப்டன் தோனிக்காக கோப்பையை கண்டிப்பாக வெல்வோம் என்று தெரிவித்துள்ளார் சென்னை அணியில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா.
Suresh raina

- Advertisement -

இதுபற்றி அவர் கூறுகையில்”டோனி தலைமையில் விளையாடுவதை நான் பெருமையாக கருதுகிறேன். தோனி ஒரு சிறந்த மனிதர். சென்னை அணியின் பல ஆடுகளாக கேப்டனாக இருந்து வரும் தோனி தன்மீது பல விமர்சங்கள் வந்த போதெல்லாம் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த பினிஷெர் என்பதை நிரூபித்துள்ளார். இறுதி போட்டிக்கு சென்னை அணி தகுதி பெற்றபோது தோனி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவருக்காக இந்த ஆண்டு நாங்கள் இறுதி போட்டியில் வென்று கோப்பையை காய் பெற வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement