ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத வீரரை தேர்வு செய்த சி.எஸ்.கே – கைதட்டி கேலி செய்த கூட்டம்

Csk
- Advertisement -

இந்த ஆண்டு 14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் அண்மையில் சென்னையில் நடைபெற்று முடிந்தது. இதில் அனைத்து அணிகளும் போட்டிக்கு போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை வாங்கி வருகின்றனர். மேலும் இந்த ஏலத்தின் முடிவில் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பதை பொறுத்தே அணியின் பலம் காணப்படும். அதனால் இந்த வருட ஐ.பி.எல் தொடரின் ஏலத்தினை கூட ரசிகர்கள் போட்டிகளை காண்பதை போல மும்முரமாக கவனித்து ஆரவாரம் செய்தனர்.

auction-1

- Advertisement -

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் மோசமாக விளையாடியதன் காரணமாக பல வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதிலும் குறிப்பாக கேதார் ஜாதவ் பெரிதளவு சொதப்பியதால் அவரை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவித்தது. இந்நிலையில் மிடில் ஆர்டர் பலப்படுத்தும் வகையில் வீரர்களை தேர்வு செய்யும் என்று எதிர்பார்த்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்றும் ஏமாற்றமாகவே அமைந்தது.

ஏனெனில் டெஸ்ட் பார்மட்டில் விளையாடி வரும் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் மிகவும் பொறுமையாக விளையாடி பழக்கப்பட்டவர். அதிலும் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து அவர் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதே கிடையாது. அப்படி இருக்கையில் ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. 2008 முதல் 14 வரை விளையாடிய புஜாரா 30 போட்டிகளில் விளையாடிய 390 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.

அதிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் கீழ் உள்ளது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது சென்னை அணி மூலமாக மீண்டும் ஐபிஎல் தொடருக்கு புஜாரா வந்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்ட புஜாராவை யாரும் எடுக்க முன்வராத நிலையில் சென்னை அணி அவரை தேர்வு செய்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

50 லட்ச ரூபாய் அடிப்படையாகக் கொண்ட அவரை அதே தொகைக்கு சிஎஸ்கே அணி தேர்வு செய்தது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தையும் அளித்துள்ளது. மேலும் புஜாராவை சென்னை அணியில் ஏலத்தில் எடுத்தபோது அனைத்து அணிகளும் கைதட்டி ஆரவாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. புஜாரா டெஸ்ட் பிளேயர் என்று தெரிந்தும் சி.எஸ்.கே அணி அவர் மீது நமபிகை வைத்து ஏலத்தில் எடுத்த அந்த தைரியத்தை பார்த்து அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் கைதட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement