- Advertisement -
ஐ.பி.எல்

சென்னை அணியில் அதிரடி மாற்றம் …இன்றைய போட்டியில் ரெய்னா விளையாடுவாரா ?

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் பதினோறாவது சீசனில் இன்று இரவு 8மணிக்கு சென்னை சூப்பர்கிங்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளது.இன்றைய போட்டியில் சென்னை அணி சிற மாற்றங்களுடன் களத்தில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாடுகளுக்கு பின்னர் இந்த ஐபிஎல் சீசனில் தோனியின் தலைமையில் களமிறங்கியுள்ள சென்னை அணி இதுவரை மூன்று லீக் போட்டிகளில் விளையாடி மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளை வெற்றி பெற்றும், பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தும் இரண்டு வெற்றி ஒரு தோல்வி என்கிற நிலையுடன் புள்ளிப்பட்டியலில் உள்ளது.இந்நிலையில் இன்றைய போட்டி சென்னைக்கு பதிலாக புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி சென்னையில் நடைபெற்றபோது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடாமல் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக்கூடாதென்று அரசியல் கட்சிகள் மற்றும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.அதையும் தாண்டி போட்டி நடைபெற்றபோது நாம்தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் மைதானத்தில் செருப்பு வீசினர்.

இதனால் சென்னையில் நடக்கவிருக்கும் அடுத்தடுத்த 7 போட்டிகளிலும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் அனைத்துமே புனேவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இன்றைய போட்டியில் சென்னை அணியை பொறுத்தவரையில் சில வீரர்கள் உள்ளே கொண்டுவரப்படலாம்.

- Advertisement -

புனேவில் நேற்றைய பயிற்சியின் போது தோனி கலந்துகொண்டதால்,அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதேபோல காயம் காரணமாக அவதிப்பட்ட ரெய்னாவும் குணமடைந்துவிட்டதால் அவரும் மீண்டும் அணிக்கு திரும்பலாம்.இதுவரையிலும் விளையாடாத டூப்ளெசிஸ் இந்த போட்டியில் களமிறக்கப்பட்டால் அவருக்கு பதிலாக முரளி விஜய் அல்லது ஷேன்வாட்சனுக்கு இன்றைய போட்டியில் ஓய்வளிக்கப்படலாம்.

அதேபோல கேதார் ஜாதவிற்கு பதிலாக அணியில் இணைந்த டேவிட் வில்லே இன்றைய போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கலாம்.பந்துவீச்சில் கரண் சர்மா இன்றைய போட்டிக்குள் கொண்டுவரப்படலாம் என்றும் தெரிகின்றது.ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் ஜெப்ரி ஆர்ச்சர் மட்டும் இன்று களமிறக்கப்படலாம்.
இரண்டு அணிகளுமே கடைசியாக விளையாடிய லீக் போட்டிகளில் தோல் வியடைந்துள்ளதால் இன்றை போட்டியில் வெற்றிபெற முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனலாம்.

- Advertisement -
Published by
Tags: Suresh Raina