- Advertisement -
ஐ.பி.எல்

212 ரன்ஸ்.. சதத்தை தவறவிட்ட ருதுராஜ்.. கலக்கிய மிட்சேல், துபே.. இந்தியாவை முந்தி சிஎஸ்கே புதிய உலக சாதனை

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 46வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு ஓப்பனிங்கில் களமிறங்கிய ரகானே தடுமாறி 9 (12) ரன்களில் புவனேஸ்வர் குமார் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் கேப்டன் ருதுராஜ் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அடுத்ததாக வந்த டேரில் மிட்சேல் மீண்டும் தடுமாற்றமாக விளையாடி ரசிகர்களை கடுப்பேற்றினார். இருப்பினும் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாட துவங்கிய அவரும் ஹைதராபாத் பவுலர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு இந்த சீசனில் முதல் முறையாக அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

உலக சாதனை:

அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னையை வலுப்படுத்திய அவர் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (32) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல மறுபுறம் தொடர்ந்து அசத்திய ருதுராஜ் 27 பந்துகளில் அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே அதிரடியாக விளையாடி கை கொடுத்தார்.

- Advertisement -

அதைப் பயன்படுத்திய ருதுராஜ் இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி சதத்தை நெருங்கினார். அதனால் கடந்த போட்டியை போலவே இப்போட்டியிலும் 2வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 98 (54) ரன்களில் நடராஜன் வீசிய கடைசி ஓவரில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

அப்போது ரசிகர்களின் உச்சகட்ட ஆரவாரத்திற்கு மத்தியில் வந்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பவுண்டரியுடன் 5* (2) ரன்கள் எடுத்தார். அவருடன் மறுபுறம் அட்டகாசமாக விளையாடிய சிவம் துபே 1 பவுண்டரி 4 சிக்சருடன் 39* (20) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் சென்னை 212/3 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் தமிழக வீரர் நடராஜன், புவனேஸ்வர் குமார், உனட்கட் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதையும் படிங்க: கண்டிப்பா 200 ரன்னை சேஸ் பண்ண முடியும்னு எனக்கு தெரியும்.. ஆனா இப்படி நடக்கும்னு தெரியாது – டூபிளெஸ்ஸிஸ் மகிழ்ச்சி

இந்த போட்டியையும் சேர்த்து ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை மொத்தம் 35 முறை 200க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளது. இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 200+ ரன்கள் அடித்த அணி என்ற புதிய உலக சாதனையும் சென்னை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. சென்னை சூப்பர் கிங்ஸ் : 35*
2. சோமர்செட் : 34
3. இந்தியா : 32
4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : 31

- Advertisement -