மீண்டும் கொரோனா பாசிட்டிவ் ஆன சி.எஸ்.கே வீரர். தொடரின் முதல் சில வாரங்கள் பங்கேற்பதில் சிக்கல் – விவரம் இதோ

Chahar

இந்த வருட ஐபிஎல் பேச்சு ஆரம்பமானதில் இருந்து சென்னை அணியில் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்த வருட ஐபிஎல் தொடர்ருக்காக கடந்த மாதம் 21ம் தேதி துபாய் சென்று சிஎஸ்கே அணி 6 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கொரோனா பரிசோதனை மேற்கொண்டது.

csk 1

அதில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் இளம் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் தீபக் சாகர் கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்து தற்போது அணியில் பயிற்சியை துவங்கியுள்ளார். மேலும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் அவர் வெளியிடுவார் என்று தெரிகிறது. ஆனால் கொரோனா பாதிப்பில் சிக்கிய மற்றொரு வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டின் நிலைமை தற்போது வரை என்ன என்று தெரியவில்லை.

மேலும் அவருக்கு இன்னும் சில நாட்கள் தனிப்படுத்துதல் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத்தொடர்ந்து மேலும் 2 முறை கொரோனா பரிசோதனை மீண்டும் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த பரிசோதனையின் முடிவின் படியே அணியில் அவரது இடம் இருக்கும் என்றும் தெரிகிறது எனவே அவர் சிஎஸ்கே அணியில் முதல் பாதியின் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெளியான அதிகாரபூர்வ தகவலின்படி மீண்டும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற ரிசல்ட் மட்டுமே வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவர் இந்த தொடரில் முதல் சில வாரங்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முடிவு பாசிட்டிவ் ஆக இருந்தாலும் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லயாம். இருந்தாலும் அவர் நெகட்டிவ் ரிசல்ட் வரும்வரை காத்திருந்துதான் ஆகவேண்டும்.