ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடர் பல்வேறு சிரமங்களுக்கிடையே தற்போது நடைபெற்று வருகிறது. இருந்தாலும் தற்போது வரை தொடர்ந்து காயம் காரணமாக தங்களது சொந்த காரணங்களுக்காகவும் ஒருசில வீரர்கள் இத்தொடரில் விளையாடமுடியாமல் தொடர்ந்து விலகி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் துவங்கியது முதல் தற்போது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. முதலில் ஹர்பஜன்சிங் பயிற்சி முகாமிற்கு வரவில்லை. அதன் பின்னர் அந்த அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஐக்கிய அரபு அமீரகம் வந்து திடீரென அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட சிறு சண்டை காரணமாக அணியை விட்டு வெளியேறினார்.
அணியை விட்டு வெளியேறி மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு திரும்பி வந்துவிட்டார். அதன் பின்னர் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆட போவதில்லை என்றும் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் குழம்பிப் போயினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் இந்த வருடம் சுரேஷ் ரெய்னா 10 கொடி இழக்கப் போகிறார் என்பது போல் தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் நான் சென்னை அணியில் ஆடுவதை நீங்கள் பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவின் வருகை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சமீபத்தில் ரெய்னா சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தை அன்பாலோ செய்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ரசிகர்கள் ரெய்னாவின் வருகையை எதிர்பார்த்த நிலையில் அவரின் இந்த செயல் மீண்டும் அவர் அணியுடன் இணையமாட்டார் என்பதை உணர்த்தியது.
இந்நிலையில் தற்போது சி.எஸ்.கே தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் இருந்து ரெய்னாவின் பெயரை நீக்கியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் எடுத்து வருவதால் இனி ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆட மாட்டார் என்பது போல் தெரிகிறது. இந்த விடயம் தற்போது ரசிகர்களிடைய பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.