சிஎஸ்கே அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட இருக்கும் ஐந்து வீரர்கள் – விவரம் இதோ

csk

இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.

இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் மற்றும் வீரர்கள் மாற்றம் ஆகியவை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து நீக்கப்பட இருக்கும் வீரர்களின் பட்டியலை வைத்திருக்கவேண்டும்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பையை வென்ற அணியும், இந்திய ரசிகர்களின் பெரிய ஆதரவையும் வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முதல் 5 வீரர்களை விடுவிக்கச் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

CSk

அதன்படி தற்போது அந்த வீரர்கள் யாரென்றால் இந்திய அணியின் வீரரான மோகித் சர்மா, இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, நியூசிலாந்தை சேர்ந்த ஸ்காட் குஜ்ஜிலின் ஆகியோரை விடுவிக்க சென்னை அணி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது

- Advertisement -