ஆமைவேகம், மீண்டும் அவமானம் ! சென்னையா இது – வரலாற்றில் முதல் முறையாக படுமோசமான 2 சாதனைகள்

DC vs CSK
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக கோப்பையை வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஆரம்ப முதலே தீபக் சஹர் காயத்தால் விலகியது, தேவையின்றி கேப்டன்சிப் பொறுப்பை ஜடேஜாவிடம் தோனி வழங்கியது போன்ற பல குளறுபடியான நிகழ்வுகள் தொடர் தோல்விகளை பரிசளிக்கிறது. அதனால் ஏற்கனவே 8 தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த சென்னை தனது 13-வது லீக் போட்டியில் நேற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் மிரட்டும் குஜராத்தை எதிர்கொண்டது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிரட்டிய குஜராத் சென்னையை 7 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வ வைத்து 10-வது வெற்றியை சுவைத்தது.

Wriddhiman Saha 67

ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பறிபோனதால் ஜெகதீஷன், பிரசாந்த் சோலங்கி, மதீஸா பதிரனா ஆகிய 3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த கேப்டன் எம்எஸ் தோனி அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆனால் அதற்கு ஏற்றார்போல் பேட்டிங் செய்யாத அந்த அணி 20 ஓவர்களில் 133/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அளவுக்கு அசத்தலாக பந்துவீசிய குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சமி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

சென்னை பரிதாபம்:
அதை தொடர்ந்து 134 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு சுப்மன் கில் 18 (17) மேத்தியூ வேட் 20 (15) ஹர்டிக் பாண்டியா 7 (6) ஆகிய முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்கள். ஆனாலும் தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அனுபவ வீரர் ரித்திமான் சாஹா 8 பவுண்டரி 1 சிக்சருடன் 67* (57) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.1 ஓவரில் 137/3 ரன்களை எடுத்து எளிதாக  வென்ற குஜராத் பங்கேற்ற 13 போட்டிகளில் 10-வது வெற்றியை பதிவு செய்து முதலிடத்தை வலுவாக பிடித்துள்ளது.

Rashid Khan Ruturaj

மறுபுறம் பேட்டிங்கில் வெறும் 133 ரன்கள் எடுத்த சென்னைக்கு இளம் பவுலர் மதீஸா பதிரனா 2 விக்கெட்டுக்கள் எடுத்து போராடிய போதிலும் வெற்றியைப் பெற்றுத்தர முடியவில்லை. பொதுவாக டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தது 150 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றிக்காக போராடவாவது முடியும். ஆனால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு டேவோன் கான்வே 5 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து ஜோடி சேர்ந்த மொய்ன் அலி – ருதுராஜ் 2-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற முயன்றனர்.

- Advertisement -

ஆமைவேகம் அவமானங்கள்:
ஆனால் 21 (17) ரன்களில் மொயின் அலி அவுட்டாக அடுத்து களமிறங்கிய ஜெகதீசன் மெதுவாக பேட்டிங் செய்ய அவரை விட மெதுவாக ருதுராஜ் பேட்டிங் செய்தார். சொல்லப்போனால் 15 ஓவர்கள் நெருங்கியும் 7 விக்கெட்டுகள் கையிலிருந்தும் அவர்கள் மெதுவாய் பேட்டிங் செய்தனர். இறுதியில் 49 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த ருத்ராஜ் 16-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் களமிறங்கிய சிவம் துபே 0 (2) எம்எஸ் தோனி 7 (10) ஆகியோரும் அதிரடியாக ஆட முயன்றாலும் குஜராத்தின் தரமான பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிக பந்துகளில் குறைந்த ரன்களுக்கு அவுட்டாகி சென்றனர். அதனால் நீண்ட நாட்கள் கழித்து விளையாடும் ஜெகதீசனும் 39* (33) ரன்கள் மட்டுமே எடுத்தாலும் அதிரடி காட்ட முடியவில்லை.

Ruturaj gaikwad 73

1. குறிப்பாக நேற்றைய போட்டியில் கடைசி 15 ஓவர்களில் சென்னை பேட்ஸ்மேன்கள் யாருமே 1 பவுண்டரி கூட அடிக்கவில்லை. கடந்த 2008 முதலில் வெற்றி மேல் வெற்றி குவித்து 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள சென்னை கடைசி 5 ஓவர்களில் 1 பவுண்டரி கூட அடிக்காதது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். சென்னை போன்ற வெற்றிகரமான அணிக்கு நிச்சயமாகவே இது ஒரு அவமானமாகும்.

- Advertisement -

2. மேலும் இந்த தோல்வியுடன் பங்கேற்ற 13 போட்டிகளில் 9-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 9 தோல்விகளை பதிவு செய்து மேலும் ஒரு அவமானத்தை சந்தித்துள்ளது. வரலாற்றில் சென்னை அதிகபட்ச தோல்விகளை பதிவு செய்த சீசன்கள் இதோ:
9 தோல்விகள் : 2022*
8 தோல்விகள் : 2012/2020

CSK MS Dhoni Ravindra Jadeja

3. முன்னதாக ஏற்கனவே முதல் 4 போட்டிகளில் தோற்ற சென்னை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனின் முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்து பரிதாப சாதனை படைத்தது.

- Advertisement -

4. அத்துடன் தொடர் தோல்விகளால் 2020க்கு பின் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் மீண்டும் அவமானத்தை சந்தித்துள்ளது.

CSK-1

5. இதுவரை வரலாற்றில் ஒரு முறை கூட சென்னை புள்ளி பட்டியலில் கடைசியிடம் பிடித்ததில்லை. ஆனால் தற்போது 9-வது இடத்தை பிடித்துள்ள அந்த அணி தனது கடைசி போட்டியில் தோற்று 10-வது இடத்தில் இருக்கும் மும்பை தனது 2 கடைசி போட்டிகளில் வென்று விட்டால் அந்த அவமானத்தையும் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதை பார்க்கும் அந்த அணி ரசிகர்கள் நம்ம சென்னையா இது கவலையடைந்துள்ளனர்.

Advertisement