IPL 2023 : கேகேஆர் அணியின் ஆல் டைம் சாதனையை தகர்த்து கொல்கத்தாவை தனது கோட்டையாக்கிய சிஎஸ்கே – புதிய சாதனை

CSK vs KKR MS Dhoni Moeen Ali Sivam dube
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 33வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 235/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கைக்வாட் 35 (20), டேவோன் கான்வே 56 (40), அஜிங்க்ய ரகானே 71* (29), சிவம் துபே 50 (21), ரவீந்திர ஜடேஜா 18 (8) என களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ரன்களை குவிக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக கெஜ்ராலியா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 236 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு நாராயண் ஜெகதீசன் 1, சுனில் நரேன் 0 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க வெங்கடேஷ் ஐயர் 20, நித்திஷ் ராணா 27 என அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மிடில் ஆர்டரில் ஜேசன் ராய் அதிரடியாக 61 (26) ரன்களும் ரிங்கு சிங் 53* (33) ரன்கள் எடுத்து போராடியும் ஆண்ட்ரே ரசல் அதிரடி காட்ட தவறியதால் 20 ஓவர்களில் கொல்கத்தாவை 186/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அபார வெற்றி பெற்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் டேஷ்பாண்டே மற்றும் தீக்சனா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

கொல்கத்தா கோட்டை:
அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டி நடைபெற்ற கொல்கத்தா மைதானத்தில் இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த தோனிக்காக ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் நிற உடை அணிந்து சென்னை அணிக்கு ஆதரவு கொடுத்தனர். குறிப்பாக கொல்கத்தாவா சேப்பாக்கமா என்று யோசிக்கும் அளவுக்கு தங்களுக்கு ஆதரவு கொடுத்த கொல்கத்தா ரசிகர்களை 18 சிக்ஸர்களை பறக்க விட்டு மகிழ்வித்த சென்னை இந்த சீசனில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக சாதனை படைத்தது.

அத்துடன் 235/4 ரன்கள் குவித்த சென்னை இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் சாதனை படைத்தது. இதற்கு முன் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் 228/4 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை விட நூற்றாண்டு சிறப்புமிக்க கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஏராளமான திரில்லர் நிறைந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதை அறிவோம்.

- Advertisement -

அப்படி வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி (235/4) என்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாதனையை நேற்று உடைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 232/4 ரன்கள் குவித்ததே ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட முந்தைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோராகும். அதே போல கொல்கத்தாவுக்கு எதிராக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் சென்னை சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. 235/4 : சென்னை, 2023*
2. 228/4 : ஹைதெராபாத், 2023*
3. 213/4 : பெங்களூரு, 2019
4. 210/4 : மும்பை, 2018
5. 204/2 : பஞ்சாப், 2010

இதையும் படிங்க: CSK vs KKR : இந்த ஒரு விஷயத்தை நெனச்சா என்னால ஜீரனிக்க முடியல. தோல்விக்கு பிறகு – நிதீஷ் ராணா பேட்டி

அப்படி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து தங்களைக் காண வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்துக்கு நிகராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தையும் தங்களது கோட்டையாக நேற்றைய போட்டியில் மாற்றியது என்றே சொல்லலாம். இதையடுத்து வரும் ஏப்ரல் 27ஆம் தேதி சென்னை தன்னுடைய அடுத்த போட்டியில் ராஜஸ்தானை ஜெய்ப்பூரில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement