தோத்தாலும் மாபெரும் சாதனையுடன் தோற்ற சி.எஸ்.கே அணி – இந்த 14 வருஷத்துல யாரும் படைக்கா சாதனையின் விவரம் இதோ

CSK
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியானது நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது. பின்பு 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

- Advertisement -

இப்போட்டியில் முதல் இன்னிங்சை ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த ஒரு அணியும் செய்யாத ஒரு மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறது.
முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்துராஜ் கெயக்வாட், ஆட்டத்தின் நான்காவது பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். இவரை அடுத்து களமிறங்கிய மொயீன் அலி, டுயூப்ளசிஸுடன் இணைந்து ஒரு அற்புதமான பார்ட்னர் ஷிப்பைக் கொடுத்தார்.

அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 58 பந்துகளில் 103 ரன்களை குவித்திருந்தபோது, 11வது ஓவரில் பும்ரா வீசிய 5வது பந்தில் மொயீன் அலி அவுட் ஆகி வெளியேறினார். அதற்குப் பிறகு களமிறங்கிய சுரேஷ் ரெய்னாவையும், நன்றாக ஆடிக்கொண்டிருந்த டுயூப்ளசிஸையும் 12வது ஓவர் வீசிய கைரன் பொல்லார்ட் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் எடுத்து சென்னை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இரண்டு விக்கட்டுகளை தொடர்ச்சியாக இழந்த சென்னை அணி அதற்குப்பிறகு ரன் குவிக்க தடுமாறும் என்றே எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

rayudu 2

ஆனால் அப்போது களத்திற்குள் வந்த அம்பத்தி ராயுடு விக்கெட் விழுந்ததைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தார். அவருக்கு உறுதுணையாக மற்றொரு புறம் ஆடிக்கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட இந்த இருவரும் 49 பந்துகளில் 102 ரன்களை குவித்து, சென்னை அணி 218 ரன்கள் அடிக்க உதவியாக இருந்தனர்.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் எந்த அணியும் இதுவரை ஒரே போட்டியில் இரண்டு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்ததில்லை. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்ததால், ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் அணி என்ற சாதனையைப் படைத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Advertisement