இந்த வருட ஐ.பி.எல் தொடரில் மோசமான சாதனையை படைத்த சி.எஸ்.கே – இதை விட அசிங்கம் வேறெதும் இல்ல

CSK-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

CSKvsRR

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்களும், தோனி 28 ரன்கள் அடித்து இருந்தனர். அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 அவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

- Advertisement -

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவரே தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பிளேஆப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது என்றே கூறலாம்.

buttler

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதையே நாம் கண்டு வருகிறோம். ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து மைதானங்களும் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக அமைகின்றன. அதனால் முதலில் பேட்டிங் செய்யும் மணி பல போட்டிகளில் வென்றுள்ளதை நாம் இத்தொடரில் கண்டு வருகிறோம்.

- Advertisement -

அந்த வகையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது. அது யாதெனில் இதுவரை நடைபெற்ற 36 லீக் போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணி குறைந்தது 150 ரன்களை அடித்து விடும். ஆனால் நேற்றைய போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 125 ரன்களை அடித்து மோசமான சாதனையை படைத்துள்ளது.

jadeja 1

இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்து குறைந்த ரன்களை அடித்த அணியாக சி.எஸ்.கே மாறியுள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை எப்போதும் இல்லாத வகையில் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தானை முன்னுக்கு தள்ளி கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement