அடுத்த ஐ.பி.எல் தொடருக்காக சி.எஸ்.கே அணி தக்க வைக்கும் 5 வீரர்கள் இவர்கள்தானாம் – லிஸ்ட் இதோ

CSK-1

ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை. தோனியாவது ஓரளவிற்கு ஆடி ரசிகர்களை ஆதங்கத்தை தீர்ப்பார் என்று பார்த்தால் அவரும் 14 போட்டிகளில் விளையாடி 200 ரன்கள் மட்டும் தான் அடித்திருந்தார். அதே நேரத்தில் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அடுத்த வருட ஏலத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் .

புதிய அணியை கட்டமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று மிகவும் கூலாக சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் தோனி. இதற்காக அணி முற்றிலும் மாற்றப்படுகிறது. சென்னை அணி அடுத்த சில வருடங்களுக்கு ஆக ஒரு சில வீரர்களை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும். அந்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

Ruturaj

ருதுராஜ் கெய்க்வாட் :

இந்த வருட ஆரம்பத்தில் ஓரளவிற்கு நன்றாக ஆடாவிட்டாலும் கடைசி மூன்று போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்து தனது இடத்தை உறுதி செய்து விட்டார். இவர் சென்னை அணியின் மத்தியில் ஒரு பெரும் நம்பிக்கையை விதைத்து இருக்கிறார். இவரை கண்டிப்பாக அந்த அணி தக்க வைத்துக் கொள்ளும்.

curran

- Advertisement -

சாம் கரன் :

இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை இவர்தான். பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் தனது ஆட்டத்தைத் தொடர்ந்து மிகச் சிறப்பாக செய்து வந்தார். சென்னை அணி இதுவரை கழட்டிவிட வாய்ப்பே இல்லை என்பது தான் நிதர்சனம்.

ரவீந்திர ஜடேஜா :

சமீபகாலமாக பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் ரவீந்திர ஜடேஜா. இவரையும் சென்னை அணி விட்டு விடாது. ஏனெனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அசத்தும் இவர் இன்னும் சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

faf

டூ ப்லஸ்ஸிஸ் :

சீனியர் வீரரான இவர் இந்த வருடம் துவக்க போட்டிகளில் நன்றாக அடைந்தார். அதன் பின்னர் சொதப்பி விட்டாலும் இவரை சென்னை அணியை தக்கவைத்துக்கொள்ளும் ஏனென்றால் தோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம் என்ற ஒரு திட்டம் அந்த அணிக்கு இருக்கிறது.

மகேந்திர சிங் தோனி :

யார் என்ன கூறினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அடுத்த பத்து வருடங்களுக்கு கட்டமைக்க போவது தோனிதான். இவர்தான் அந்த அணியின் பின்னாலிருந்து இயக்கப் போகிறார். அங்கே ஒரு காட்பாதர் ஆக இருப்பார். அடுத்த வருடம் கேப்டன் பதவியில் இருந்து விலகி விட்டாலும் இவர் சொல்படிதான் அடுத்த பத்து வருடங்களுக்கு சென்னை அணியின் இயக்கம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.