பிட்டாக இல்லாத வீரரை அணியில் விளையாட வைத்து ரிஸ்க் எடுக்கிறாரா ? தோனி – விவரம் இதோ

Dhoni

ஐபிஎல் தொடரின் 23 ஆவது லீக் போட்டி தற்போது டெல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது சென்னை அணி முதலில் பந்து வீசி வருகிறது.

Dhoni

சென்னை அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ள தோனி மொயின் அலி மற்றும் லுங்கி நெகிடி ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளார். கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை என்றாலும் இப்போது காயத்தில் இருந்து மீண்டு விட்டதால் அணியில் இணைந்துள்ளார்.

ஆனால் கடந்த போட்டியில் விளையாடிய போது ராயுடு பேட்டிங் செய்கையில் காயமடைந்தார். அதன் காரணமாக பேட்டிங் செய்ய முடியாமல் சற்று திணறி அவர் இறுதியில் தேவையில்லாமல் ஒரு ஷாட்டை அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் பீல்டிங் செய்யும்போது கூட அவர் பீல்டிங் செய்ய வரவில்லை.

Rayudu 3

இதன் காரணமாக அவர் காயம் அடைந்து விட்டார் என்பது தெளிவாக தெரிந்தது. அதேபோன்று சிஎஸ்கே அணியின் இன்றைய பயிற்சியிலும் பெரிய அளவில் ராயுடு காணப்படவில்லை ஆனாலும் ராய்டு இன்றைய போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

rayudu 2

இப்படி 100 சதவீதம் பிட் இல்லாத ஒரு வீரரை அணியில் தேர்வு செய்தது சிஎஸ்கே அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா ? என்பது போன்ற சில கேள்விகளும் இணையத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் அதற்கான விடை கிடைக்கும்.