சச்சின் தந்தை பெயர் அவமதிப்பா…! கொந்தளித்த ரசிகர்கள் – சிக்கலில் சிக்கிய சென்னை வீரர் !

sachin6
- Advertisement -

வடிவேலு காமெடியில் வரும் “அவசரத்துல மண்டை மேல இருக்கிற கொண்டைய மருந்துட்டேனே “போல பிரபல கிரிக்கெட் ஜாம்பவானின் பெயரையே ட்விட்டரில் தப்பாக போட்டு ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டுள்ளது சென்னை அணி.

- Advertisement -

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகள் முதல் ஐபில் போட்டி வரி விளையாடியவர். மேலும் இவரது புகழை உலகமே அறியும். மேலும் ஐபில் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாகவும் இருந்து வந்தார். தற்போது மும்பை அணியின் அசோகராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐபில் போட்டிகளில் போது சில நாட்களுக்கு முன்னர் மும்பை மற்றும் சென்னை அணிக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அந்த போட்டி முடிந்ததும் சென்னை அணியில் விளையாடி வரும் ரெய்னா மற்றும் சச்சின் ஆகிய இருவரும் படிக்கட்டில் ஏறி வருவது போல ஒரு புகைப்படம் வெளியானது.

இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சென்னை அணி எதுகை மோனையில் பேசுவதாக எண்ணி பிரபல 5 ஸ்டார் விளம்பரத்தில் வரும் ரமேஷ் மற்றும் சுரேஷ் என்ற பெயர்களை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் சச்சினின் பெயரை ரமேஷ் என்று தவறாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் காண்டாகி என்ன பதிவை போடுகிறோம் என்று பார்த்து போடுங்கள் என்று சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தை கிழித்தெடுத்து வருகின்றனர்.

Advertisement