யாரும் எதிர்பாரா வகையில் முக்கிய வீரரை அணியில் இருந்து வெளியேற்றிய தோனி – பிளேயிங் லெவன் இதோ

Dhoni-1

ஐபிஎல் தொடரின் 15 ஆவது லீக் போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. சற்று முன் போடப்பட்ட டாசிற்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது.

CSKvsKKR

அதன்படி கொல்கத்தா அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களை அந்த அணியின் கேப்டன் மோர்கன் செய்துள்ளார். அதன்படி கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷகிப் அல் ஹசன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சுனில் நரைன் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அதே போன்று மற்றொரு மாற்றமாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதில் கமலேஷ் நாகர்கோட்டி அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சென்னை அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய கேப்டன் தோனி அணியில் ஒரே ஒரு மாற்றத்தை மற்றும் செய்துள்ளார். கடந்த சில போட்டிகள் ஆகவே சொதப்பி வரும் துவக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிராவோவை அவர் வெளியேற்றி உள்ளார்.

bravo

அவருக்கு பதிலாக லுங்கி நெகிடியை அணியில் இணைந்துள்ளார். மேலும் பிராவோ வெளியேற்றத்திற்கு காரணம் அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் அவருக்கு ஒரு ஓய்வு தேவை என்ற காரணத்தாலேயே இன்றைய போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளதாக தோனி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்த போட்டியில் சரியாக விளையாட வில்லை என்றால் ருதுராஜ் நிச்சயம் அணியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.