அணியில் இணையும் கடைக்குட்டி. இன்றைய போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் – பிளேயிங் லெவன் இதுதான்

CSK

ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் மதியம் முதல் போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. ஏற்கனவே தற்போது நடைபெற்று வரும் இந்த இரண்டாம் பாதியின் முதலிரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் நிச்சயம் இந்த மூன்றாவது வெற்றிக்காக கடுமையான போராட்டத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

cskvskkr

ஏற்கனவே புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவரும் சென்னை அணி மீண்டும் வெற்றி பெற முயற்சிக்கும். அதே வேளையில் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க கொல்கத்தா அணி இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதால் அந்த அணி கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் விளையாடும் பிளேயிங் லெவன் வீரர்கள் குறித்த விவரங்களை தற்போது காணலாம். அதன்படி முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத சாம் கரன் தற்போது குவாரன்டைனை முடித்து உள்ளதால் அவர் நிச்சயம் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

curran 1

அந்த வகையில் இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) டூபிளெஸ்ஸிஸ், 3) மொயின் அலி, 4) சுரேஷ் ரெய்னா, 5) அம்பத்தி ராயுடு, 6) ஜடேஜா, 7) தோனி, 8) பிராவோ, 9) சாம் கரன், 10) ஷர்துல் தாகூர், 11) தீபக் சாகர்

Advertisement