இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது தோனியின் தலைமையிலான சென்னை சிஎஸ்கே அணி. இந்நிலையில் தற்போது இன்று நடைபெறும் இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக பலம்வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தியதால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெறுமா ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இன்றைய போட்டியிலும் சிஎஸ்கே அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.
மேலும் காயத்திலிருந்து குணமாக பிராவோ இன்றைய போட்டியிலும் விளையாடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமையிலான அணியில் பட்லர் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித், மில்லர், உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஆர்ச்சர் போன்ற சிறப்பான வீரர்கள் உள்ளனர். இதுவரை இரண்டு அணிகளும் 21 முறை மோதியுள்ளன அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14 முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இன்றைய போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெறும் என்று பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தோனியின் தலைமையிலான சென்னை அணி அனைத்து தொடர்களிலும் லீக் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டியில் பலம்வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தியதால் இன்றைய போட்டியில் சென்னை அணியில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. ராஜஸ்தான் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் ஆடும் உத்தேச சி.எஸ்.கே லெவன் அணி இதோ :
1) வாட்சன்
2) முரளி விஜய்
3) டூப்ளெஸ்ஸிஸ்
4) ராயுடு
5) தோனி
6) கேதார் ஜாதவ்
7) ஜடேஜா
8) சாம் கரண்
9) தீபக் சாகர்
10) பியூஷ் சாவ்லா
11) லுங்கி நெகிடி