IPL 2021 : முதல் போட்டிக்கான சி.எஸ்.கே அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

CSK-1
- Advertisement -

இந்தியாவில் துவங்கி நடைபெற்ற 14வது ஐபிஎல் தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. தற்போது எஞ்சியுள்ள 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

CskvsMi

- Advertisement -

நாளைய முதல் போட்டியில் இவ்விரு அணிகளும் துபாய் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு சுமார் ஏழு முப்பது மணிக்கு பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் நாளைய போட்டியில் சிஎஸ்கே அணியில் எந்தெந்த வீரர்கள் ? இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏனெனில் கரீபியன் லீக் தொடரில் காயமடைந்த டூபிளெஸ்ஸிஸ் நாளைய போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. அதேபோன்று இங்கிலாந்திலிருந்து தாமதமாக வந்த சாம் கரன் 6 நாட்கள் கட்டாய குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்பதால் அவரும் இடம்பெற மாட்டார். இந்நிலையில் நாளைய போட்டியில் டூபிளெஸ்ஸிஸ்க்கு பதிலாக ராபின் உத்தப்பா இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

uthappa

அதே போன்று சாம் கரனுக்கு பதிலாக ஹேசல்வுட் விளையாடுவார் என்று தெரிகிறது. நாளைய போட்டிக்கான சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் உத்தேச அணி இதோ :

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) ராபின் உத்தப்பா, 3) மொயின் அலி, 4) சுரேஷ் ரெய்னா, 5) அம்பத்தி ராயுடு, 6) ரவீந்திர ஜடேஜா, 7) மகேந்திரசிங் தோனி, 8) ஷர்தூல் தாகூர், 9) தீபக் சஹார், 10) லுங்கி நெகிடி, 11) ஜோஸ் ஹேசில்வுட்.

Advertisement