நேற்றைய போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய சென்னை வீரர்கள் – காரணம் இதுதான்

CSK-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

CSK_VS_DC

அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா 64 ரன்களை குவித்தார். அதன் பின்னர் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. டூபிளெஸ்ஸிஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி சார்பாக ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ப்ரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று இரண்டு அணி வீரர்களும் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடி விளையாடினார்கள்.

axar

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மறைவிற்காக இந்த கருப்பு சட்டையை அவர்கள் அணிந்திருந்தனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாடகர் எஸ் பி பி-யின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கருப்புப் பட்டை அணிந்து இருப்பதாக சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்பிபி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னை அணி வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement