இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சியில் மும்முரம். தோனி இணைகிறார் – அதிகாரபூர்வ அறிவிப்பு IPL2020

Dhoni-1

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் சில நாட்களே உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் இந்த தொடர் துவங்க உள்ளது. இந்த தொடரில் சி.எஸ்.கே அணியின் வருகையையும், தோனியின் வருகையும் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறது. அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களது வீரர்களை வைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்ற முறை கோப்பையை தவறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறையாவது வென்று விடும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா மற்றும் முரளி விஜய் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் வலையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

மேலும் தோனியும் இன்னும் சில நாட்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவார் என்றும் , சென்னையில் அவர் பயிற்சியை மேற்கொள்ள விரைவில் சென்னை வருவார் என்றும் தெரிகிறது.

- Advertisement -