கிரிக்கெட் விளையாடுவதற்கு முன் வேர்க்கடலை விற்ற சென்னை வீரர் – யார் தெரியுமா ?

CSK1

உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக உருவாகியுள்ள தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த 21வயதான லுங்கிநிகிடி ஐபிஎல் போட்டிகளில் இந்த சீசனில் சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.இந்த ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட களமிறங்காத லுங்கிநிகிடியின் தந்தை ஜெரோம் நிகிடி தீடிரென உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் தனது தந்தையின் இறுதி சடங்குகளில் கலந்துகொள்ள தென்ஆப்பிரிக்காவிற்கு கிளம்பி சென்றுவிட்டார்.

lungi1

இந்நிலையில் இந்த ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவை சேர்ந்த லுங்கிநிகிடி தனது கடந்தகால நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

சிறு வயதில் தன்னுடைய சகோதரருடன் இணைந்து வீதிகளில் வேர்க்கடலை விற்றதாக கூறியுள்ளார்.அதை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.வேர்க்கடலை விற்று வரும் பணத்தை லுங்கிநிகிடி தனது அம்மாவிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

தற்போது தனது தந்தையின் இறுதி சடங்குகளுக்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள லுங்கிநிகிடி ஒரு வாரத்திற்கு பின்னர் இந்தியாவிற்கு திரும்பி மீண்டும் சென்னை அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.என்னதான் மீண்டும் சென்னை அணியில் இணைந்தாலும் விளையாடும் 11பேர் கொண்ட அணியில் இடம்பிடிப்பாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

- Advertisement -
Advertisement