ஐபிஎல் தொடர் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு நடுவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தனித்தனி ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு, ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனி ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு உயிர்பாதுகாப்பு வளையம் என்ற ஒரு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் பல்வேறு விதிமுறைகள் இருக்கிறது. இந்த மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் தான் அனைவரும் இருக்க வேண்டும்.
இங்கு வருவதற்கு முன்னரே 14 நாட்கள் ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்கள். தற்போது வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இந்த மருத்துவ பாதுகாப்பு விதிகளை மீறிக் கொண்டே இருப்பதாக பிசிசிஐக்கு புகார்கள் வந்த நிலையில் இருக்கின்றன. இதன் காரணமாக மீண்டும் இதே வழிமுறைகள் புதுப்பிக்கப்பட்டு கட்டமைக்கபட்டுள்ளது.
இப்படி புதிது புதிதாக விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வரும் வேளையில். சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் கே எம் ஆசிப் இந்த உயிர் பாதுகாப்பு வளையத்திற்கு ஆன விதிமுறைகளை மீறியதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.
இதன் காரணமாகத்தான் தற்போது இந்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன என்ற தகவல்களும் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதன்படி சிஎஸ்கே பயிற்சி முகாமிற்கு சென்று விட்டு திரும்பிய முகமது ஆசிப் தன்னுடைய அறைச் சாவியை மைதானத்தில் மறந்து வைத்து விட்டு வந்து விட்டார் போலிருக்கிறது. அறையின் புதிய சாவியை வாங்குவதற்காக ஹோட்டல் ரிசப்ஷன் வந்திருக்கிறார்.
இந்த ஹோட்டல் ரிசப்ஷன் பகுதி உயிர் பாதுகாப்பு வளையத்தின் விதிமுறைக்கு அப்பாற்பட்ட பகுதியாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. ஆனால் அவர் இந்த விதிமுறையை மீரவில்லை என்று சென்னை அணியின் சிஇஓ காசிவிஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில் :
இது உண்மை இல்லை. ஏனெனில் ரிசப்ஷன் உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் தான் இருக்கிறது.
ஆசிப் சாவியைத் தொலைத்துவிட்டு ரிசப்ஷன் சென்று கேட்டது உண்மைதான். இந்த விஷயம் ஊதிப் பெரிதாக்கபடுகிறது என்றும் இதை பெரிய அளவில் ஆராய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார் காசி விஸ்வநாதன்.