இந்த ஐ.பி.எல் தொடரின் பவர் பிளேவில் அதிக டாட் பால்களை விளையாடிய அணி எது தெரியுமா ? – விவரம் இதோ

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் பாதி ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அணியும் 10 போட்டிகளில் விளையாடி முடிந்தது. இந்த தொடர் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் மட்டுமே நடைபெற்று வருவதால் ஒவ்வொரு போட்டியும் சற்று வித்தியாசமான முடிவையே கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

Dubai

- Advertisement -

இந்த தொடரின் ஆரம்ப காலத்தில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளங்கள் தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிட்டது. பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் தற்போது அடிக்கப்பட்டு வருகிறது. தற்போது பவர்பிளே ஓவர்களில் எந்த அணி அதிக சதவீதத்தில் பந்துகளை ஆடாமல் கட்டை வைத்துள்ளது என்பது பற்றி பார்ப்போம்.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்திருக்கிறது. பவர் பிளே ஓவர்களில் 6 ஓவர்தான் வீசப்படும். இந்த 36 பந்துகளில் 52.1 சதவீத பந்துகளில் சென்னை அணி ரன் எடுக்காமல் இருந்து இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 20 பந்துகள் ஆடாமல் கோட்டை விட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி 49.5 சதவீதமும் டாட் பால் விளையாடியுள்ளது.

dot

ராஜஸ்தான் 48.8 சதவீதமும், மும்பை இந்தியன்ஸ் 48.2 சதவீதம் இடத்தில் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன. பஞ்சாப் அணி 41 சதவீதம் மட்டுமே பந்தை வீணடித்து இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் 10 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி மோசமான ஆட்டத்தின் காரணமாகத்தான் சி.எஸ்.கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால் மிகையாகாது.

Advertisement