இந்தாண்டு சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேற்றப்பட உள்ள 5 வீரர்கள் – நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு

CSK-1
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக 13வது ஐபிஎல் சீசன் பல சவால்களை எதிர்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்ததில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை 5 ஆவது முறையாக கைப்பற்றியது. இந்த 13வது ஐபிஎல் சீசனில் தான் சிஎஸ்கே அணி முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சிஎஸ்கே வீரர்களுக்கு வயதாகியதும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் அணியிலிருந்து விலகியதும் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

- Advertisement -

தற்போது 2021 இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளதால் அனைத்து அணிகளும் தற்போதிலிருந்து தயாராகி வருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் பிளமிங் 2021 ஆண்டு நடைபெறும் 14வது ஐபிஎல் சீசனுக்காக தனது அணியின் புதுமுக வீரர்களை தேர்வு செய்து வருகிறார்.

அதோடு வருகின்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்கப்படும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் சிலர் வெளியேற உள்ளனர். இந்த பட்டியலில் ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ் ஆகியோர் உறுதியாக வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரண் சர்மா, இம்ரான் தாஹிர் ஆகியோரும் நீக்கப்பட உள்ளனர்.

Jadhav-2

இவர்களை எல்லாம் வெளியேற்றுவதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு 12 முதல் 15 கோடி ரூபாய் வரை மிச்சமாகும். இந்த தொகையை வைத்து சிஎஸ்கே அணியில் புதுமுக வீரர்களை தேர்வு செய்யலாம் என்று அணி நிர்வாகம் ஆலோசனை செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிம் செய்ஃபர்ட்டின் ஆட்டத்தை கண்டு ஸ்டீபன் பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்வது போல் நாட்களுக்கு முன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jadhav

மேலும் இந்தாண்டு ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் அடுத்த ஆண்டு 10 அணிகள் விளையாட உள்ளதால் இந்தாண்டு அனைத்து அணிகளும் சரியான கலவையில் வலிமையான வீரர்களை விலைக்கு வாங்க உள்ளனர். இப்போதே அணியை தயார்படுத்தினால் தான் இனிவரும் தொடர்களில் சி.எஸ்.கே அணி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும். எனவே இந்த வருட ஏலத்தில் பல புதிய வீரர்களை சி.எஸ்.கே அணி நிர்வாகம் விலைக்கு வாங்குவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Advertisement