துவக்க வீரராக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னனை குறிவைக்கும் சி.எஸ்.கே அணி – விவரம் இதோ

Csk-vsMi
- Advertisement -

2021 ஐ.பி.எல் தொடருக்காக சி.எஸ்.கே அணி தீவிரமாக தயாராகி கொண்ட வருகிறது. இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் ஏலம் சென்னையில் நடக்க உள்ளது. இதனால் எந்தெந்த வீரர்களை எல்லாம் ஏலத்தில் எடுக்கலாம் என்று சி.எஸ்.கே தனியாக பட்டியல் ஒன்றை போட்டுள்ளது. பல இளம் வீரர்களை இந்த முறை சிஎஸ்கே குறி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியில் புதிய வீரராக அறிமுகமாகி கலக்கி வரும் இளம் வீரர் ஒருவரை தோனி குறி வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

mayers

- Advertisement -

அவர் வேறு யாரும் அல்ல மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர் கைல் மேயர்ஸ் ஆவார். இவர் அந்த அணியில் டெஸ்ட் போட்டிகளில் தற்சமயம் அறிமுகமாகி ஆடி வருகிறார். டெஸ்ட் பார்மெட் போட்டிகளில் டி20களில் விளையாடுவது போல கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடிக்கொண்டு வருகிறார். வங்கதேச அணிக்கு எதிராக இவர் ஆடிய ஆட்டம் சர்வதேச அளவில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கைலி மையர்ஸ் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். இதுதான் இவருக்கு முதல் டெஸ்ட் போட்டி ஆகும்.

இவர் அடித்த ஷாட்கள், கவர் டிரைவ், லாங் ஆப், லாங் ஆன் திசைகளில் அடித்த சிக்ஸ்ஸர்கள் என்று எல்லாமே பார்க்க மிக அற்புதமாக இருந்தது. முதல் இன்னிங்சில் கைல் மேயர்ஸ் 40 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 310 பந்துகள் பிடித்த இவர் 7 சிக்ஸர்கள் உட்பட 20 பவுண்டரிகளை அடித்தார். கடைசிவரை அவுட்டாகாமல் மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிபெறவும் வைத்தார்.

mayers 2

இந்த நிலையில் இவர் இந்தாண்டு நடக்கயிருக்கும் ஐபிஎல் தொடரிலும் தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளார். இவரின் பெயர் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இவரை சிஎஸ்கே அணி குறி வைக்கும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணியும் பொதுவாக ஒரு கரிபியன் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கும். அந்த வகையில் சிஎஸ்கேவில் பிராவோ இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சிஎஸ்கே தனது ஓப்பனிங் வீரராக கைல் மேயர்ஸ்யை கொண்டு வரும் என்று கூறுகிறார்கள். டேரன் ஸ்மித் ஒரு காலத்தில் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரராக இருந்து அசத்தினார். அதேபோல் கைல் மேயர்ஸ்யை சிஎஸ்கே அணி குறி வைக்க போகிறது என்கிறார்கள். இவரை குறைந்த விலையில் சிஎஸ்கே எடுக்கும் என்றும் ஒருபக்கம் கூறப்பட்டு வருகிறது.

mayers 1

பிராவோவிற்கு தற்போது வயதாகிவிட்டது. இதனால் எதிர்காலத்தில் அவருக்கு மாற்றாக கைல் மேயர்ஸ் கட்டாயம் இருப்பார். கைல் மேயர்ஸ்யை பிராவோதான் பரிந்துரை செய்துள்ளார் என்றும் மும்பையில் பொல்லார்ட் இருப்பது போல சிஎஸ்கே விற்கு இனி கைலி இருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement