சி.எஸ்.கே அணி குறிவைக்கும் 2 ஆஸ்திரேலிய வீரர்கள். எடுத்தா சி.எஸ்.கே அசைக்க முடியாது – விவரம் இதோ

CSK-1
- Advertisement -

2008ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதுவரை 13 ஐபிஎல் சீசன்கள் நடைபெற்ற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று யாரும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்று இருக்கிறது.

- Advertisement -

2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 வது ஐபிஎல் சீசனின் மினி ஏலத்தை பிப்ரவரி 11ஆம் தேதி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இதற்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்படும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 20ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் அணியின் ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களின் பட்டியலையும், மோசமாக விளையாடியதால் வெளியேற்றப்படும் வீரர்களையும் அறிவித்திருக்கிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்ட வீரர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மினி ஏலத்தின் மூலம் மற்ற அணியில் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெறியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

CSK

இதில் கேதர் ஜாதவ், முரளி விஜய், வாட்சன், சாவ்லா, மோனு சிங், ஹர்பஜன் சிங் ஆகிய ஆறு வீரர்கள் வெறியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் சென்னை அணி கிட்டத்தட்ட 22 கோடி மீதம் வைத்திருக்கிறது. இந்நிலையில் 13வது ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சி.எஸ்.கே அணி இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களை ஏலத்தில் எடுக்க மும்முரம் காட்டி வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக மோசமாக விளையாடிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் மற்றும் ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் எடுக்க மும்முரம் காட்டுகிறது. சி..எஸ்.கே அணியின் பலமிழந்த மிடில் ஆர்டர் இவர்களின் வருகையின் மூலம் பலப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement