தோனிக்கு மட்டுமே க்ரீன் சிக்னல். அவரது குடும்பத்திற்கு ரெட் சிக்னல் – சி.எஸ்.கே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Sakshi-1

ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. மூன்று மைதானங்கள் இதற்காக தயார் படுத்தப்பட்டு வருகிறது. துபாய் சார்ஜா அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் மொத்தமுள்ள 60 போட்டிகளும் நடத்தப்படும்
இதற்காக உயிர் பாதுகாப்பு வளையம் அதிகபட்ச பாதுகாப்புடன் தயார் படுத்தப்பட்டு வருகிறது.

ipl

ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று துபாய் செல்வதற்கு அணி வீரர்களும் ஊழியர்களும் தயாராக இருக்கவேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த உயிரி பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் வந்துவிட்டால் மீண்டும் அவர்கள் குடும்பத்தை சந்திக்க செல்ல முடியாது.
சமீபத்தில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்வது சிரமமானது என்று கூறியிருந்தார்.

இதற்கு இந்திய அணி வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். உடனடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் காரணமாக தோனி மற்றும் ரெய்னா போன்ற வீரர்கள் குடும்பங்கள் யாரும் தங்களது குடும்பங்களை ஐக்கிய அரபு அமீரகம் கூட்டிச்செல்ல முடியாது என்று தெரியவந்துள்ளது.

Sakshi

சி.எஸ்.கே வீரர்களுக்காக துபாய் அருகில் உள்ள புர்ஜ் கலிஃபா நட்சத்திர விடுதியில் சென்னை அணி வீரர்கள் தங்குவதற்காக மட்டும் மூன்று மாடிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக தோனியுடன் அனைத்து மைதானங்களுக்கும் செல்லும் தோனியின் மனைவி சாக்ஷி செல்ல முடியாது என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

மேலும் எப்போதும் சென்னை அணியை உற்சாகப்படுத்தும் தோனியின் மனைவி மற்றும் மகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்பாடு செய்யும் விமானத்தில் மட்டுமே வீரர்கள் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்று பல உயிர் பாதுகாப்பு வளையம் தொடர்பான விதிகளும் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.