தோனி வெளியிட்ட சி.எஸ்.கே அணியின் புது ஜெர்சி. ஆர்மி கலர்லாம் ஓகே – அந்த 3 ஸ்டார்ஸ் எதுக்கு தெரியுமா ?

csk-jersey

14வது ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில் இந்த தொடருக்கான விறுவிறுப்பும் தற்போது அதிகரித்து ஐபிஎல் களம் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணி சென்னையில் பயிற்சியினை தொடங்கி தற்போது மும்பைக்கு சென்றுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் இந்த ஆண்டுக்கான புது சீருடையை (ஜெர்சியை) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

csk jersey 3

இந்த ஜெர்சியில் ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் தோள்பட்டையில் இரண்டு புறமும் ராணுவ உடைக்கே உரித்தான பிரத்யேக தோற்றத்தில் ‘Camouflage’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜெர்சியினை அணியின் கேப்டன் டோனி வெளியிட்டுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் கேம் ஸ்பிரிட் உடன் விளையாடிய சென்னை அணி 6 சீசனில் ஃபேர் பிளே விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது தவிர கடந்த ஆண்டை தவிர மற்ற அனைத்து தொடர்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி சென்னை அணி தான். இப்படி ஐபிஎல் தொடர் முழுவதுமே தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் நாட்டின் நிஜ ஹீரோக்களுக்கு தங்களது பாராட்டுக்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆர்மி கலரை தோள்பட்டையில் இணைத்துள்ளோம் என்று சிஎஸ்கே நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

csk jersey 1

மேலும் இந்த வடிவம் குறித்து நாங்கள் நீண்ட நாட்களாக ஆலோசித்து வந்தோம். அது இப்போதுதான் கை கூடியுள்ளது எனவும் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோவிற்கு மேல் மூன்று நட்சத்திரங்கள் ஜெர்சியில் பதிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

அந்த 3 ஸ்டார் குறிப்பது யாதெனில் இதுவரை ஐபிஎல் தொடரில் சென்னை அணி மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதனை நினைவுகூரும் வகையாக மூன்று நட்சத்திரங்கள் சென்னை அணியின் லோகோவின் மேல் பதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் இந்த ஜெர்சியை வாங்க விரும்பும் ரசிகர்கள் சென்னை அணியின் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.