சி.எஸ்.கே பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் எத்தனை வெற்றிகள் தேவை ? – விவரம் இதோ

CSK
- Advertisement -

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுதுமே ஒரு மிகப்பெரிய அணியாக ஐபிஎல் வரலாற்றில் திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஒரு தொடரில் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றோடு வெளியேறிய சென்னை அணி இம்முறை மீண்டும் பலமாக திரும்பி உள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் சிக்கித் தவித்த சென்னை அணி தற்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

CSK

- Advertisement -

இந்த 14வது ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த சி.எஸ்.கே அணியானது முதல் 7 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணி இன்னும் எத்தனை வெற்றிகள் பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறித்த தகவலை தான் நாம் இந்த பதிவில் காண இருக்கிறோம்.

அதன்படி இந்த 14 வது சீசனில் டெல்லி அணிக்கு எதிரான துவக்க போட்டியிலும், கடைசியாக நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த சென்னை அணி மற்றபடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் சென்னை அணிக்கு இரண்டாம் பாதியில் ஏழு போட்டிகள் மீதமுள்ளன.

csk vs rr

இவ்வேளையில் எஞ்சிய 7 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலே சென்னை அணி எளிதாக பிளேஆப் சுற்றுக்குள் நுழையும். ஏற்கனவே 5 வெற்றிகளை பெற்ற தோனியின் தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு இந்த மூன்று வெற்றிகள் பெரிய விடயம் கிடையாது. அதே போன்று தோனியும் விரைவில் முழுநேர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவிப்பார் என்று அதிகளவு பேசப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையுடன் தோனி விலக அதிக வாய்ப்பு உள்ளதால் இந்த தொடரை கைப்பற்ற சிஎஸ்கே அணி வீரர்கள் நிச்சயம் கடுமையாக போராடுவார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement